2ஜி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி அவரின் மனைவிக்கு ஜாமீன் வழங்க டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஆனால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது .
83 வயதான தயாளு அம்மாளுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம் , " தயாளு அம்மாள் சொந்த ஜாமினுக்காக ரூபாய் 5 இலட்சம் , பிணையாக கட்ட வேண்டும் . மேலும் அவருக்கு இரண்டு பேர் உறுதித் தொகையாக அதே மதிப்பீட்டில் பிணை கட்ட வேண்டும் . ஜாமீன் பத்திரிக்கையை இரண்டு நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் தரப்பில் சமர்பிக்க வேண்டும் " என்று உத்தரவிட்டுள்ளனர் .
வயது ஆனதால் தனக்கு ஞாபக சக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் , அதனால் 2ஜி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்து இருந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.