ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் பிரிவில்
இந்தியாவின் தீபிகா பல்லிகல் (23) வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய
வேண்டிதாயிற்று. இருப்பினும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபிகா பெற்றார். தென் கொரியாவின் இன்சியானில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றுவருகிறது.
இதில் திங்கள்கிழமை நடைபெற்ற ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் தீபிகா 25 நிமிடங்களில் 4-11, 4-11, 5-11 என தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மலேசியாவின் நிகோல் டேவிட்டிடம் படுதோல்வியைத் தழுவினார். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை நிகோல் ஆதிக்கம் செலுத்தினார். இந்த விளையாட்டு 1998இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து ஒற்றையர் ஆட்டத்தில் இதுவரை ஒரு முறை கூட நிகோல் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போராடுவேன் -தீபிகா: வருங்காலங்களில் போட்டியின் அட்டவணையை எதிர்த்துப் போராடுவேன் என்று தீபிகா கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜோஷ்னாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிக முக்கியமானது. இப்போட்டியின் அட்டவணையின்படி, தொடக்க நிலைகளிலேயே ஜோஷ்னாவை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதை எதிர்த்து நான் குரல் கொடுத்தவுடன் ஜோஷ்னாவுடன் மோதுவதற்கு நான் விரும்பவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதனால், ஜோஷ்னாவுடனான ஆட்டத்தில் பெற்ற வெற்றி மிக முக்கியமானதாகும். இருவரும் தொடக்க நிலையில் மோதாமல் இருந்திருந்தால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் இதுபோன்று அட்டவணை அமையாமல் இருக்க எந்தெந்த வழிகளில் போராட முடியும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்றார். இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்ட அட்டவணை குறித்து சர்ச்சை எழுந்தது. 2006 தோஹா போட்டி, 2010 குவாங்ஜெü போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களின் தொடக்க நிலையிலே இந்திய வீரர்கள் சந்தித்ததால் சர்ச்சை எழுந்தது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.