சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக செல்பிக்களை ஷேர் செய்வது , உண்மையான வாழ்க்கை உறவுகளை பாதிக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது .
பிரிட்டிஷ் ஆய்வாளர்களின் கருத்துப்படி , நிறைய செல்பிக்களை பதிவு செய்பவர்கள் தங்கள் உண்மையான வாழ்க்கை உறவுகளை கெடுத்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர் .
இந்த ஆய்வை நடத்திய டேவிட் டாக்டன் கூறுகையில் , " நாம் பேஸ்புக்கில் போடும் ஒவ்வொன்று பற்றியும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்வர் . நமது நண்பர்கள் , சொந்தங்கள் தவிர மற்றவர்கள் இந்த போட்டோக்களின் மூலம் தங்களை நன்கு தொடர்பு படுத்திக் கொள்ள முடியாது " என்றார் .
மேலும் காதலிப்பவர்கள் யாரேனும் குடும்ப போட்டோக்களை விட நண்பர்களின் போட்டோக்களை பகிர்ந்தால் அது ஒரு பாதுகாப்பு இல்லாத உணர்வை துணைக்கு உண்டாக்கும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.