விண்வெளி மீது ஆர்வம் கொண்டவர்களா நீங்கள் !! உங்களுக்கென்று நாசா நிறுவனம் 20,000 டாலர் பரிசுப் போட்டி அறிவித்துள்ளது . செவ்வாய் கிரகத்திற்கு அவர்கள் அனுப்ப உள்ள விண்கலத்தில் போதுமான எடையுடன் கூடிய சிறு இயந்திரங்களை அனுப்ப அதற்கான மாதிரியை தயாரித்து கொடுகக் இந்த போட்டியை அறிவித்துள்ளனர் . இந்த போட்டிக்காக சரியான இடையுடன் மற்றும் சம நிலையில் உள்ள மாதிரியை அவர்கள் தயாரிக்க வேண்டும் . இந்த போட்டிக்கு " மார்ஸ் பேலன்ஸ் மாஸ் சேலஞ்ச் " என பெயரிட்டுள்ளனர் .
இது குறித்து நாசாவின் உயர் அதிகாரி கூறுகையில் , " பொது மக்களை இது போன்ற ஆக்கப்பூர்வமான சேல்ஞ்சுகள் மூலம் நாசா அறிவியல் ஆராய்சிகளில் ஈடுபடுத்த இருக்கிறது " என்றார் .
இந்த போட்டிக்கான இறுதி நாள் நவம்பர் 21 . போட்டி முடிவுகள் அடுத்த வருடம் ஜனவரியில் அறிவிக்கப்படும் . போட்டியில் வெல்பவர்களுக்கு 20,000 டாலர்கள் பரிசளிக்கப்படும் .
இதற்கென நாசா தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.