காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக வெள்ள நிவாரண நிதி பல இடங்களில் சேகரிக்கப்பட்டது . குவைத்தில் உள்ள இந்திய மாணவன் ஒருவன் இந்த வெள்ள நிவாரண நிதியாக 2 லட்சம் ரூபாய் சேகரித்து உள்ளான் .
பிரத்யுஷா என்னும் 11 ஆம் வகுப்பு மாணவன் 1001 குவைத் டினார்கள் சேகரித்தான் . அதாவது இந்திய மதிப்பில் 2,12,449 ரூபாய் . தன்னுடைய சொந்த முயற்சியால் சேகரிந்த இந்த பணத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளான் .
இந்த சிறுவனின் நல் மனதை குவைத்தில் உள்ள இந்திய துதரகம் பாராட்டியது .
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளில் இப்போது ஏற்பட்டது தான் மிகவும் மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.