இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள் யார் என்றால் அதில் கபில் தேவ், அசாருதீன், சவுரவ் கங்குலி , மகேந்திர சிங் தோனி ஆகியோர் இருப்பார்கள். இவர்களில் யார் சிறந்த கேப்டன் என்றால் கங்குலிக்கும் தோனிக்கும் தான் போட்டியாக இருக்கும். அவர்களில் யார் சிறந்த கேப்டன் என ஆராய்ந்து பார்த்ததில் கங்குலி சிறந்த கேப்டனாக திகழ்கிறார். அதற்கான 5 காரணங்களும் கூறப்பட்டுள்ளன.
* கங்குலி கேப்டன் பொறுப்பை ஏற்ற போது இந்திய அணி மேட்ச் பிக்ஸிங்கால் பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்தது. தோனி பொறுப்பு ஏற்கும் போது அப்படி எந்த பிரச்சனையும் இல்லை.
* வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது கேப்டனுக்கு முக்கியமான ஒன்று ஆகும். அதனை பார்க்கும் போது கங்குலி தோனியை விட அதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
* சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் போன்ற வீரர்கள் உருவாகுவதற்கு கங்குலி முக்கிய காரணமாக இருந்தார். சச்சின், திராவிட்,லஷ்மன் என இந்திய அணிக்கு 3 தூண்களை உருவாக்கினார்.
* இந்திய அணி மீது மரியாதை வருமாறு அணியை மாற்றி அமைத்தவர் கங்குலி,
* மற்ற வீரர்களை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவுக்கு வெளியில் தானும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிருபித்து உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.