விவேக், அஜீத் படங்களில் நடித்து கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. இருவரும் கடைசியாக ‘கிரீடம் ’ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இருவரும் சந்தித்து பேசி கொள்வதற்கும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. தான் இயக்கும் படத்தில் விவேக்கையும் நடிக்க வைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் விரும்பினார். எந்த யோசனையும் இல்லாமல் அஜித்தும் ஒ.கே சொல்லிவிட்டார்.
சமீபத்தில் ‘சிக்கிம்’ மாநிலத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பினார்கள் இருவரும். விமானத்தில் பக்கத்து பக்கத்து சீட் என்பதால் இருவரும் நிறைய பேசினார்கள். இருவரும் மனம் விட்டு பேசினார்கள். இப்போது எல்லாம் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரியவில்லை என்று விவேக் கூறினார். அப்போது அஜித் தன் கையில் அவர் கட்டியிருந்த
விலை உயர்ந்த கடிகாரத்தை கழற்றி அப்படியே விவேக் கையில்
கட்டிவிட்டாராம்.‘இனி உங்களுக்கு நல்ல நேரம்தான்’ என வாழ்த்தும் கூறினார்.
அதன் பிறகு சிக்கிமில் இறங்கி ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரே காரில் சென்று கொண்டிருந்தார்களாம் இருவரும். காரை ஓட்டிய டிரைவர் தனக்கு வரும் போன் அழைப்புகளை மிகவும் சிரமப்பட்டு அட்டர்ன் பண்ணிக்
கொண்டிருந்தாராம். ஏனென்றால் அவ்வளவு பழைய போன் அது. விவேக்கிடம் பேசிக்கொண்டே ஒரு கண்ணால் அதையும்
கவனித்து வந்த அஜீத், வண்டி டவுன்ஷிப் ஒன்றை கடக்கும்
போது காரை நிறுத்த சொன்னாராம். அங்கு ஒரு ஐ போனை வாங்கி டிரைவருக்கு தந்து அதிர்ச்சியளித்தார்.
இந்த இரண்டு சம்பவத்தையும் தான் சந்திக்கும் அனைவரிடமும் சொல்லி, ஏன் தான் அஜித் இப்படி இருக்கிறார் என அஜித்தின் பெருமையை பரப்பி வருகிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.