ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளுக்கிடையில் அணுசக்தி
ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து
அமெரிக்க, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க்கில்
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
""அணுசக்தி ஒப்பந்தம் குறித்த ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான
பேச்சு வார்த்தையில் பல்வேறு விவகாரங்கள் இடம் பெற்றிருந்தன.
அந்த விவகாரங்களின் தற்போதைய நிலவரம் குறித்து ஜான் கெர்ரியும், ஜாவத் ஜரீஃபும் ஆய்வு செய்தனர். அந்த விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், அவை குறித்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார். இரு தலைவர்களிடையே தனியாக நடைபெறும் முதல் சந்திப்பு இது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு நீடித்த இந்தச் சந்திப்பின்போது, வெளியுறவுத்துறை இணையமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வெண்டீ ஷெர்மன் ஆகியோர் உடனிருந்தனர். ஈரான் குழுவில், ஜாவத் ஜரீஃபுடன் சட்டம் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை இணையமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஐரோப்பா மற்றும் அமெரிக்க விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மஜீத் தக்த் ரவாஞ்சி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஐ.எஸ். அச்சுறுத்தல்: பேச்சுவார்த்தையின்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்தும் ஜான் கெர்ரியும், ஜாவத் ஜரீஃபும் விவதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கைஐ.எஸ்.ஸூக்கு எதிரான போரில் ஈரானின் உதவியைப் பெறுவதற்காக, அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்துவது ஆபத்தானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெருசலேமில் திங்கள்கிழமை கூறுகையில், ""தங்கள் சுய நலனுக்காகத்தான் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஈரான் போரிடுகிறது. இஸ்லாமிய உலகுக்கு தலைமை வகிக்கப்போவது யார் என்பதில் ஐ.எஸ். அமைப்புக்கும், ஈரானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது'' என்றார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.