கங்கையை சுத்தப்படுத்துவதற்கு முன் யமுனாவை கழிவுகளில் இருந்து சுத்தப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் தெரிவிக்கையில் , " கங்கையை சுத்தப்படுத்துவது என்பது ஒரு நீண்ட நாள் திட்டமாகும் . நாங்கள் சில நாட்களுக்கு முன்பாகவே கங்கையை சுத்தப்படுத்துவதற்கு முன் யமுனாவை சுத்தப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து விட்டோம் " என்றார் . மேலும் அவர் நதிகளை சுத்தப்படுத்துவதற்கு என தனித் துறை அமைத்ததால் பிரதமர் மோடியை பாராட்டினார் .
யமுனா நதிக்கரைகளை சுற்றி உள்ள மக்களிடம் நதிகளில் எந்த கழிவுப் பொருட்களும் போடாமல் பாதுகாத்துக் கொள்ளவும் என அறிவுரை கூறினார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.