இந்தியாவின் இஸ்ரோ வெற்றிகரமாக தன்னுடைய பி.எஸ்.எல்.வி சி - 23 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது . இந்த ராக்கெட்டில் 5 வின்களங்கள் உள்ளது .
இன்று காலை 9:52 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது . இந்த ராக்கெட் 44.44 மீட்டர் உயரும் 230 டன் எடையும் கொண்டதாக இருக்கிறது . ராக்கெட் ஏவுதளம் சென்னையில் இருந்து 80 கீமீ தூரத்தில் உள்ளது .
இந்த ராக்கெட்டில் உள்ள முக்கிய விண்களம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்பாட் - 7 என்னும் விண்களம் . இது 714 கிலோ எடை கொண்டது . மேலும் ஜெர்மணியின் ஐசாட் (14 கிலோ) , கனடாவின் என்எல்எஸ்7.1 மற்றும் என்எல்எஸ்7.2 , சிங்கப்பூரின் 7 கிலோ எடை கொண்ட வெளாஸ் ஆகிய விண்களங்களை தூக்கிச் சென்றுள்ளது .
இது புதிதாக அரசு பொறுப்பேற்ற பின் இந்தியா அனுப்பும் முதல் ராக்கெட் . ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்த்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டை தெரிவித்தார் .
இதுவரை பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 35 வெளிநாட்டு விண்கள
ங்களை விண்ணில் செலுத்தியுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.