நேற்று முன்தினம் போரூரில் உள்ள ஒரு 11 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இதனால் அந்த இடம் முழுவதும் சேதமானது. அந்த குடியிருப்பின் பெயர் டிரஸ்ட் ஹைட் ஆகும். இங்கு கடந்த ஆண்டே அனைத்து வீடுகளும் விற்று தீர்ந்து விட்டன. புது வீட்டில் குடி போகலாம் என வீடு வாங்கியோர் காத்து கொண்டு இருந்தனர் ,ஆனால் எதிர்ப்பாராதவிதமாக இவ்வாறு நடந்து விட்டது. அங்கு ஒவ்வொரு மாடியிலும் நான்கு வீடுகள் உள்ளன .அவை 2 படுக்கையறை வசதி கொண்டது. சுமார் 975 முதல் 1115 சதுர அடிகள் வரை இருக்கும் ஒவ்வொரு வீடுகளின் அளவும் .அதன் மதிப்பு ரூபாய் 51 இலட்சம் முதல் 59 இலட்சம் வரை இருக்கும்.
வீடு வாங்கியோர் தங்களது பணத்தை திரும்ப தர வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து உள்ளனர். கட்டுமான நிறுவனம் தரப்பில் விரைவில் இந்த பிரச்சனை தீர்க்க படும் என்றனர். அந்த கட்டுமான நிறுவனங்கள் கட்டிடம் கட்ட ஆரம்பித்த நாள் முதல் முடியும் வரை இயற்கை சீற்றம், விபத்து ஆகியவற்றுக்காக காப்பீடு செய்து இருக்க வேண்டும் . ஆனால் அது பற்றிய தகவல் எதும் தரவில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.