BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

எங்கள் பையன்களை அனுப்பி சி.பி.எம் பெண்களை கற்பழிப்போம் - நாடாளுமன்ற உறுப்பினரின் திமிர் பேச்சு !!


மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் டபாஸ் பால் . இவர் ஒரு பிரபல பெங்காலி நடிகர் .

லோக்கல் சேனல் ஒன்றில் வெளியிட்ட வீடியோவில் இவர் , " தேவைப்பட்டால்  எங்கள் பையன்களை அனுப்பி சி.பி.எம் கட்சி பெண்களை கற்பழிப்போம் " என்று கூறியது பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் கட்சி தொண்டர்களிடம் மற்ற கட்சியை மிரட்டியும் கூறியுள்ளார் .

இவரின் இந்த கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக வெளியிட்ட அறிக்கையில் அவரின் கருத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அவரிடம் இருந்து தூரப்படுத்தி கொண்டது .  ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைப் பற்றி கட்சி தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை .

இவர் மேற்கு வங்களத்தின் கிரிஷ்ணா நாகர் தொகுதியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவரின் பேச்சு மிகவும் கண்டனத்துக்குரியது ..


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media