உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்து மெக்ஃஸிகோ அணிகள் மோதினர் . தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ அணி முதல் கோலை அடித்தது . இதனால் மெக்சிகோ அணி அடுத்த சுற்றிற்கு தகுதி பெறும் என்று அனைவரும் நினைத்த நிலையில் 87 வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி கோல் போட்டது . அடுத்து சிறிது நேரத்தில் நெதர்லாந்து அணி வீரர் ராபன் பந்தை எடுத்துக் கொண்டு ஓடும் போது , மெக்சிகோ அணி வீரர் ராபேல் மார்க்யுஸ் காலை நீட்ட ராபன் பறந்து விழுந்தார் ( நடித்தார் ) . இதையடுத்து நெதர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது . அதை கோலாக மாற்றினார் ஹண்டிலார் . இதன் மூலம் மெக்சிகோ அணி உலக கோப்பையில் இருந்து விலகியது .
நடுவரின் இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது . அனைவரும் ராபனின் நடிப்பை சுட்டிக்காட்டி குறை கூறுகின்றனர் .
இதுகுறித்து ராபன் கூறுகையில் , " அம்பயரின் அந்த பெனால்டி முடிவு சரியானதே . அவர் என்னை தட்டிவிட்டார் . அந்த பெனால்டியை நடுவர் சரியாக தான் கொடுத்தார் . ஆனால் போட்டியின் முதல் பாதியில் நான் பெனால்டி வாங்க வேண்டும் என்று வேண்டுமென்றே நடித்தேன் , அதற்காக நான் இப்போது மனம் வருந்துகிறேன் . நான் அவ்வாறு செய்து இருக்க கூடாது " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.