சென்னை போரூரில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததை அடுத்து , சம்பவம் நடந்த இடத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் பார்த்தார் . இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் .
இதனையடுத்து ஏற்கனவே நெல்லூர் இணை ஆட்சியர் தலைமையில் ஒரு குழு இங்கே வந்து மீட்பு பணியை வந்து கண்காணித்தனர் . இப்போது முதல்வரே நேராக இடத்துக்கு வந்துள்ளார் .
விபத்தில் பலியான ஆந்திர தொழிலாளிகளின் குடும்பத்துக்கு 5 லட்சமும் , காயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு 50 ஆயிரமும் உதவித்தொகையாக கொடுக்க உள்ளதாக முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.