BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 30 June 2014

மீண்டும் டில்லியில் கவனம் செலுத்த போகிறார் அரவிந் கெஜ்ரிவால் !!


மக்களவர் தேர்தலில் நாடு முழுவதும் பல தொகுதிகளில் நின்று பலத்த அடி வாங்கியது ஆம் ஆத்மி கட்சி , இப்போது சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி ஹரியானா மற்றும் மஹாரஷ்ட்ராவில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது .

ஆனால் இதை அந்த கட்சியின் தலைவர் மறுத்தார் . நேற்று டில்லியில் தொண்டர்களுடன் நடந்த கூட்டத்தில் இதை தெரிவித்தார் . மேலும் அவர் கூறுகையில் நம்முடைய பலம் அனைத்தையும் டில்லியில் பயன்படுத்த வேண்டும் என்றார் .

இந்த முடிவு குறித்து தொண்டர்களின் கருத்தை கேட்ட பின் தனது இறுதி முடிவை கட்சி தெரிவிக்கும் என தெரிகிறது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media