மேற்கத்திய கல்வி முறைகளை நைஜீரியாவில் அமல்படுத்துவதை எதிர்த்து போக்கோ ஹாரம் அமைப்பினர் போராடி வருகின்றனர் . அவர்கள் 200 சிறுமியரை கடத்திச் சென்றுள்ளனர் .
இப்போது இந்த தீவிரவாத அமைப்பினர் மேலும் ஒரு தாக்குதலை நடத்தினர் . அவர்கள் கிறிஸ்தவ மத கோவில்களை குறி வைத்து தாக்குதல் நடத்தினர் . இது போன்று மூன்று கிராமங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் .
வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் , கோவிலை குறி வைத்து குண்டு வீசினர் . மேலும் பல கட்டிடங்களை தீயிட்டு கொழுத்தினர் . கோவிலில் இருந்து வெளி வந்து கொண்டு இருந்த மக்களை துப்பாக்கியினால் சுட்டனர் .
இந்த தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.