BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 July 2014

தமிழக ஆளுநர் ராஜினாமா செய்ய போகிறார ?? மோடியுடன் சந்திப்பு !!



தமிழகத்தின் ஆளுநராக இருப்பவர் ரோசய்யா . கர்நாடகாவின் ஆளுநர் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால் கர்நாடகாவிற்கும் ஆளுநராக கூடுதல் பொறுப்பில் இருக்கிறார் . இவர் செவ்வாய்க் கிழமை மோடியை சந்தித்து பேசினார் . இவர்களது சந்திப்பினால் ரோசய்யா பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சர்ச்சைகள் கிளம்பியது .

இது பற்றி உள்துறை அமைச்சகம் கூறுகையில் , " ரோசய்யா பிரதமர் அவர்களை நேரில் சந்திக்க பிரதமர் பதவி ஏற்கும் போதே முயற்சி செய்தார் . ஆனால் அன்று முடியவில்லை . இன்று அவராக தான் பிரதமரை சந்தித்தார் . தமிழக முதல்வர் ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் , உள்துறை அமைச்சகம் ரோசய்யாவை மாற்றும் முயற்சியைக் கைவிட்டு இருந்தது " என்று கூறினார் .

பிரதமருக்குப் பின் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு நடத்தினார் . இப்போது குடியரசு தலைவருடனும் சந்திபு நடத்தப் போவதாக தகவல்கள் வருகிறது .

பாஜக ஆட்சிக்கு வந்தபின் உத்தர பிரதேசம் , சத்தீஷ்கர் , மேற்கு வங்களம் , நாகலாந்து ஆகிய மாநிலங்களின் பதவி வில்கி உள்ள்னர் என்பது குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media