அதிமுக கட்சியின் செயற்குழு அந்த கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதற்கு அவைதலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார், ஜெயலலிதா முன்னிலை வகித்தார். அதில் தமிழகத்தை இப்போது மின்வெட்டு இல்லா தமிழகமாக மாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்கபட்டது. தமிழகத்தில் ஜுன் 1 முதல் மின்வெட்டு இருக்காது தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த ஜுன் 1 எப்போது வருமோ என மக்கள் இன்னும் எதிர்பார்த்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் இன்னும் மின்வெட்டு அப்படியே தான் இருக்கிறது. முன்பாவது சொன்ன நேரத்தில் மின்வெட்டு இருக்கும். ஆனால் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பிறகு எப்போது வருகிறது எப்போது போகிறது என்றே தெரியவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை மின்வெட்டு இல்லா மாநிலமாக மாற்றியதற்கு பாராட்டுகள் என்பது வெட்டி பந்தாவாக தான் தெரிகிறது.
இந்த சினிமா நடிகர்கள் தான் தேவை இல்லாமல் தனக்கு தானே விளம்பரம் பண்ணிகிறாங்கனா நீங்களும் ஏன்டா ? (கரகாட்டகாரன் கவுண்டமணி வாய்ஸ்)

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.