BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 July 2014

ஜுலை 7 இல் இஞ்ஜினியரிங் கலந்தாய்வு தொடங்குகிறது !!

ஜுன் 27 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பி.இ கலந்தாய்வு உச்ச நீதிமன்ற உத்தரவால் மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு ஜுலை 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறுகிறது. முன்பு 32 நாட்கள் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு இப்போது 29 நாட்களாக குறைந்து உள்ளதால் தினமும் நடக்கும் சுற்றுகளின் எண்ணிக்கை 8 இல் இருந்து 9 ஆக உயர்த்தபட்டு உள்ளது.



இதனால் தினமும் 5500 மாணவர்கள் வரை அழைக்கப்படலாம். முதல் நாள் மட்டும் முதல் சுற்று காலை 10 மணிக்கும் கடைசி சுற்று 7 மணிக்கும் தொடங்கிறது. அதற்கு அடுத்த நாளில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேதி அறிவிப்பு எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களுக்கு அனுப்பபட்டு வருகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media