இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் கிளர்ச்சிப் படையின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி , இந்தியா உள்ளீட்ட நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதால் அந்த நாடுகளின் மேல் போர் தொடுக்க இருப்பதாக கூறினார் .
நேற்று ரமலான் வழ்த்து செய்தியை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு . அந்த வாழ்த்து செய்தியில் , " ரமலான் மாதத்தில் அனைவரும் ஆயுதம் ஏந்தி போராட தயாராக வேண்டும் . இஸ்லாமிகயர்களின் உரிமை இந்தியா , சீனா , பாலஸ்தீனம் , சோமாலியா , எகிப்து , பிலிப்பைன்ஸ் , ஈரான் , துனிசியா , அல்ஜீரியா , பாகிஸ்தான் , இந்தோனேஷியா , துனிசியா ஆகிய நாடுகளில் மறுக்கப்பட்டு வருகிறது . இதனால் இஸ்லாமிய சகோதரரர்கள் ஜிஹாத் நடத்தப்படும் நாளை நோக்கி காத்து இருக்கின்றனர் . உலக அளவில் நமது சகோதரர்கள் தொடர்ந்து இன்னலை சந்தித்து வருகின்றனர் . அதற்கான பதிலை நாம் விரைவில் கூற வேண்டும் " என்று கூறப்பட்டு இருந்தது .
இந்த செய்தியால் ஈராக்கில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது . இந்த வார தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தனி இஸ்லாமிய நாடு என்னும் தனி நாட்டை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.