பங்களாதேஷ் அணியின் பிரபல ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் . இவரின் நடத்தை சரி இல்லாத காரணத்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார் . மேலும் 2015 வரை வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர் .
அவர் வங்கதேச நிர்வாகத்திடம் அனுமதி வாங்காமல் வெளிநாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார் . மேலும் பயிற்சிக்கு அழைத்த போது கலந்து கொள்ளாமல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்று மிரட்டினார் . மேலும் ரசிகர் ஒருவருடன் சண்டையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது பூகார் உள்ளது
இதைப் பற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் கூறுகையில் , " அவருடைய நடத்தை சரி இல்லை . வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் இப்படி இல்லை . அவருடைய நடத்தை அணியை நேரடியாக பாதிக்கும் என்பதால் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது . அவர் என்னிடம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார் . ஆனால் நாங்கள் அவருக்கு தெளிவான ஒன்றை கூற விரும்புகிறோம் . அவர் இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் "
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.