BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

ஆசிரியரை கற்பழித்து , வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர்கள் !!



உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு அவலம் அரங்கேறியுள்ளது . 23 வயது ஆசிரியர் ஒருவரை ஒருவன் கற்பழிக்க இரண்டு பேர் விடியோ எடுத்துள்ளனர் . இதைப் பற்றி வெளியே தெரிவித்தால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர் . ஆனால் தைரியமாக அந்த பெண் தனது அப்பாவிடம் இதை கூறினார் . அவரது அப்பா காவல் துறையினரிடம் பூகார் கொடுத்தார் .

இதைப் பற்றி ஆசிரியர் கூறுகையில் , நான் டியுசன் எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கும் போது , பின்னாடி ஒருவன் வந்து என் வாயை மூடி , கட்டப்பட்டு கொண்டு இருக்கும் ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றான் . மேலும் இரண்டு நண்பர்களை மொபைலில் அழைத்து வரச் சொன்னான் . இவர்களும் இந்த விஷயம் வெளியே தெரியக் கூடாது என மிரட்டினர் .

அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர் . விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது .

உத்தர  பிரதேசத்தில் இது போன்ற அவலங்கள் நிறை நடந்தேறி வருகிறது . இதனை தடுக்க வேண்டிய அரசு , தக்க நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
  


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media