BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

" அம்மா ஆட்டோ " வேண்டும் : நுகர்வோர் கோரிக்கை !!



ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளிடம் அதிகம் காசு வசூலிப்பதால் பயணிகள் கடும் துயரத்திற்கு ஆளாகின்றனர் . எனவே பயணிகளின் சுமையைப் போக்க தமிழக அரசு அம்மா ஆட்டோ போன்ற ஆட்டோக்களை இயக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது .

நுகர்வோர் பாதுகாப்பு சார்பாக நேற்று எழும்பூரில் ஒரு கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தின் முடிவில் பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது .

அந்த தீர்மாணங்களில் ஒன்றாக , சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அரசு நிர்ணயித்த கட்டணகளை விட உயர்ந்த கட்டண்ங்களை பெறுகின்றனர் . ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த தன்னிச்சையான போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் , அம்மா ஆட்டோ கொண்டு வர வேண்டும் என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது .

மேலும் காலியான நீதிபதிகளை நிரப்பும் பணியை நிறைவேற்றவும் , கட்டிடம் கட்ட அனுமதி வாங்க கடுமையான விதிமுறைகளை பின்பற்றவும் , காலவாதி மருந்துகளை தடுக்க அரசு அதிகாரிகள் தனியார் மருந்தகங்களை ஆய்வு செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன .

தமிழக முதல்வர் இந்த தீர்மாணங்களை கருத்தில் கொண்டு ஆவண செய்ய வேண்டும் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media