ஜூலை 4ம் தேதி தருமபுரி இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகின்றது, அன்று மாற்று சமுதாய தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் போட்டதாகவும் துப்பாக்கி, வெடிகுண்டு உட்பட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக நத்தம் காலனியை சேர்ந்த 7 பேரை போலிசார் கைது செய்தனர், இதனால் மேலும் பரபரப்பு கூடியது, இதையடுத்து தருமபுரியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்காரர்கள் தருமபுரியில் கூட்டம் போடுவதை தடுக்கும் முயற்சியில் போலிஸ் உள்ளது, தடையை மீறி தான் இளவரசனுக்கு அஞ்சலி செலுத்த போவதாக திருமாவளவன் கூறியுள்ளார், அதே ஜூலை 4 அன்று தனக்கு வெற்றியளித்த தருமபுரி மக்களுக்கு நன்றி செலுத்தவும் மேலும் சில திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தருமபுரி எம்பி டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் அனுமதி கோரியிருந்தார், ஆனால் போலிசார் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.