தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை
விதிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் அரசுப் பேருந்து உள்பட 7
வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைக் கண்டித்து, சென்னையில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் வாகனங்கள் தாக்கப்பட்டன. சூளைமேடு, திரிசூலம், வேளச்சேரி, திருநின்றவூர் ஆகிய இடங்களில் அரசுப் பேருந்துக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.இதேபோல், வியாசர்பாடி எருக்கஞ்சேரி சாலையில் வந்த கர்நாடகப் பதிவு எண் கொண்ட ஒரு வேனும், ஒரு காரும் தாக்கி உடைக்கப்பட்டன. சைதாப்பேட்டையிலும் ஒரு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 இடங்களில் ரயில் மறியல்: போராட்டத்தின் ஒரு பகுதியாக அதிமுகவினர், சென்னையில் திருநின்றவூர், தாம்பரம், பழவந்தாங்கல், ஆவடி, திரிசூலம் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியலால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. முக்கியமாக தாம்பரம், பழவந்தாங்கல், திரிசூலம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டத்தினால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில் புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
அம்பத்தூர் : அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் சந்திப்பிலும், கலெக்ட்ர் நகர் சந்திப்பிலும், பாடி- கொரட்டூர் சந்திப்பிலும், உருவ பொம்மைகளை எரித்தனர். மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் மீது மர்மகும்பல் கல்லால் தாக்கியதில் கடையின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. மதுரவாயல்: மதுரவாயல் பகுதியில் ஏரிக்கரை, வானகரம், மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் அதிமுகவினர் உருவ பொம்மைகளை எரித்தனர்.ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தில் திரண்ட 10 பெண்கள் உள்பட 50 அதிமுகவினர் மாலை புறநகர் ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் திருநின்றவூர் ரயில் நிலையத்திலும் அதிமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். வில்லிவாக்கம் தொடங்கி திருநின்றவூர் வரை கடைகள் அடைக்கப்பட்டன. இதில் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.