காலை 8.45 மணி : ஜெயலலிதா தனது வீடு இருக்கும் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பினார்.
காலை 8.50 மணி : கோட்டூர்புரம் பாலம் அருகே தனது காரை அங்கு இருக்கும் பிள்ளையார் கோவிலில் பிள்ளையாரை வணங்கினார்.
காலை 9.12 மணி : சென்னை ஏர்போர்ட்டுக்கு சென்றடைந்தார். அங்கு இருந்து பெங்களூருக்கு விமானம் ஏறினார்.
காலை 9.45 மணி : பெங்களூர் விமான நிலையத்தை அடைந்தார். அங்கு இருந்து லீலா பேலஸ் ஒட்டலுக்கு சென்று ஒய்வெடுத்தார்.
காலை 10.25 மணி : ஜெயலலிதாவுடன் சசிகலாவும், இளவரசியும் வந்துவிட்டார்கள். சுதாகரன் மட்டும் தற்போது வந்தார்.
காலை 10.45 மணி : ஜெயலலிதா, இளவரசி, சசிகலா ஆகியோர் ஒட்டலில் இருந்து கோர்ட்டுக்க் வந்தனர்.
காலை 11.00 மணி : வழக்கு தொடங்கியது, ஆனால் தீர்ப்பு 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு இருந்தது.
மதியம் 1.00 மணி : தீர்ப்பு 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 3.00 மணி : ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிப்பு, இதனை கேட்டு அதிமுகவினர் கதறினர். கலவரங்களை தடுக்க 5 கிமீ தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.
மாலை 4.00 மணி : 4 வருட சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் அறிவிப்பு.
மாலை 5.20 மணி : ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.