திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அந்த கட்சி பொருளாளர் மீது நேற்று திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே நடந்த சண்டையை தூண்டிவிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
கருணாநிதி , ஸ்டாலின் மட்டுமில்லாமல் மேலும் பலர் மீது 3 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . இந்த வழக்கை தொடுத்தவர்கள் அதிமுக கட்சியைச் சார்ந்த சிலர் . அவர்கள் தங்களை திமுக கட்சியினர் பயங்கரமான ஆயுதங்களால் தாக்க வந்தனர் என பூகார் கொடுத்தனர் . இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த கலவரம் நேற்று தீர்ப்பு வெளிவந்த பின் அதிமுகவினர் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய போது நடந்தது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.