நியுயார்க் நகரில் சனிக்கிழமை அன்று மோடி தனது முதல் ஐ.நா சபை உரையை நிகழ்த்தினார் . அதில் சில முக்கியமானவற்றை கீழ்க் காண்போம்
- ஜி-4 , ஜி - 7 என பல மாநாடுகள் உள்ளன . அவற்றில் இந்தியாவும் பங்கு வகிக்கிறது . ஆனால் நாம் ஏன் இந்த ஜி மாநாட்டை தாண்டி யோசிக்கக் கூடாது ?? ஐ.நா மாநாடு போன்ற அருமையான அடித்தளம் இருக்கும் போது நாம் ஏன் இந்த ஜி மாநாட்டினை தேடிச் செல்ல வேண்டும் .
- நாம் அடுத்த வருடத்தில் 70 வயதாகிவிடுவோம் . நாம் 80 ஆகும் வரை காத்து இருக்க வேண்டுமா என நம்மை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும் . அடுத்த வருடம் நமக்கு ஒரு வாய்ப்பாக இருக்கலாம் .
- தீவிவராதம் புது பெயர் மற்றும் புது உருவம் எடுத்து வருகிறது . பெரிய நாடோ , சிறிய நாடோ தெற்கோ , மேற்கோ , கிழக்கோ வடக்கோ அனைத்து நாட்டிலும் தீவிரவாதம் இருக்கிறது .
- நான் பாகிஸ்தான் நாட்டுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் . அதுவும் ஒரு அமைதியான சூழலில் எந்த்வொரு தீவிரவாதத்தின் நிழலும் இல்லாமல் . அதற்கான அமைப்பை பாகிஸ்தான் தான் உருவாக்கி தர வேண்டும்
- இந்தியா தனது தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது
- நாம் அனைவரும் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும் . சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சக்தி தான் நமக்கு இப்போதைய தேவையாக இருக்கிறது .
- ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தத்துவம் இருக்கிறது . நான் சிந்தாந்தத்தைப் பற்றி கூறவில்லை . இந்தியாவின் தத்துவம் " உலகம் அனைத்தும் ஒரே குடும்பம் "
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.