மும்பை டியோனர் பகுதியில் வசிப்பவர் 19 வயது சிறுவன் சமீர் அன்சாரி . இவர் பி.காம் படித்து வருகிறார் . இவர் அதிகாலை நேரத்தில் கோவந்தி சங்கரா காலணியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம் ஒன்றை திறக்க முயன்று கொண்டு இருந்தார் .
அப்போது போலிஸ் அவரிடம் திருடுகிறாயா என்று கேட்டபோது , பதிலுக்கு அன்சாரி , தான் ஒரு வங்கி டெக்னிசியன் என்றும் திருடன் எப்போதும் சிசிடிவி கேமராவை வைத்துக் கொண்டு திருட மாட்டான் என்றான் . ஆனால் போலிஸ்காரர்கள் சந்தேகத்தில் வங்கி அதிகாரிகளை விசாரித்தனர் . ஆனால் அன்சாரி அவர்கள் முன் அமைதியாக ஏ.டி.எம் இயந்திரத்தைக் கழற்றி கொண்டு இருந்தான் .
போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " அன்சாரி ஆன்லைன் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை துறக்க கற்று கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார் . போலிஸ் பேட்ரோல் சரியான நேரத்தில் வந்ததால் 7 இலட்ச ரூபாய் திருட்டை தடுக்க முடிந்தது . ஆனால் அன்சாரி போலிஸ் வந்த பின்னரும் எந்தவொரு பதற்றமும் இல்லாமல் ஏ.டி.எம். இயந்திரத்தை துறக்கும் முயற்சியில் இருந்தார் . ஏ.டி.எம் இயந்திரம் குறித்த தொழில்நுட்ப விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்ட பின்னர் , ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்காமல் இந்த முறையை பின்பற்றி உள்ளார் " என்றார் .
போலிசார் இப்போது அவரை கைது செய்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.