முப்பழங்களில் ஒன்றான வாழைப்பழத்தில் எப்படி எண்ணற்ற நன்மைகள்
நிறைந்துள்ளதோ, அதேப் போன்று அதன் இலைகளிலும் பலரும் அறிந்திராத வகையில்
நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும்
உள்ளது என்று சொல்லாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை
பயன்படுத்துவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து
நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம்
முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய வேகமான காலத்தில் மக்கள் வாழை இலையை மறந்து, பல்வேறு
டிசைன்களில் தட்டுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய
காரணம், நம் முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கவில்லை என்பதை விட
மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் எனவே
எந்த ஒரு சூழலிலும் நாம் முன்னோர்கள் கூறியவாறு வாழை இலையிலேயே சாப்பிட்டு
வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட்டு
இருக்கலாம். இப்போதும் ஒன்று ஆகப் போவதில்லை. அனைவரும் இன்று முதல் வாழை இலையின்
முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான
வாழ்க்கையை வாழலாம். அதுமட்டுமின்றி, வாழை இலையில் மருத்துவ குணம் அதிகம்
இருப்பதால், இது சரும பிரச்சனைகள், முடி பிரச்சனைகள் போன்றவற்றிற்கும்
தீர்வை வழங்கும். தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு பலரும்
அறிந்திராத வாழை இலையின் சில நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப்
பார்ப்போமா.
வாழை இலையில் உணவை உண்ணும் போது, எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
எப்படியெனில் வாழை இலையில் உணவை வைக்கும் போது, அதில் உள்ள உப்பு, புளிப்பு
மற்றும் காரம் போன்றவை செரிமான ஆசிட்டின் சுரப்பை அதிகரித்து, உணவானது
எளிதில் செரிமானமடைய உதவுகின்றன.
மேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது, சாதமானது இலையில் உள்ள
குளோரோபில்லை உறிஞ்சிவிடுவதால், உடலுக்கு வேண்டிய குளோரோபில் கிடைக்கிறது. வாழையில் தினமும் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தடுக்கப்பட்டு, நீண்ட நாட்கள் முடியானது கருப்பாகவே இருக்கும்.பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க, வாழை இலையில்
நல்லெண்ணெயை தடவி, அந்த இலையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து,
அவ்விலையின் மேல் குழந்தையை படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து
குழந்தைக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன், வாழை இலையானது குழந்தையை
குளிர்ச்சியுடன் வைத்து சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
குழந்தைகள் விளையாடுகிறேன் என்று எங்காவது விழுந்து காயம் ஏற்பட்டால்,
அதனை விரைவில் குணமாக்க, துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்து, காயம் அல்லது
புண் உள்ள இடத்தில் வைத்து, அதன் மேல் வாழை இலையை வைத்து கட்டினால், காயம்
அல்லது புண் விரைவில் குணமாகும். சின்னம்மை விரைவில் குணமாக வேண்டுமானால், வாழை இலையில் தேன் தடவி, அதன் மேல் சில மணிநேரம் படுக்க வைக்க வேண்டும். சொரியாசிஸ் அல்லது சரும அழற்சியினால் பாதிக்கப்பட்டவர்கள், வாழை இலையை
பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டினால், நாளடைவில் குணமாகிவிடும்.
வெளியே செல்லும் போது, உண்ணும் உணவை பாலிதீன் பேப்பர் கொண்டு கட்டி
செல்வதை விட, வாழை இலை கொண்டு கட்டிச் சென்றால், உணவானது கெடாமல்
இருப்பதுடன், நல்ல மணத்துடனும் இருக்கும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.