""வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு
வாழ்நாள் விசா வசதி வழங்கப்படும்'' என்று பிரதமர் நரேந்திர மோடி
அறிவித்துள்ளார். மேலும், ""இந்தியா வந்தடைந்தவுடன், அமெரிக்க சுற்றுலாப்
பயணிகளுக்கு உடனடி விசா வழங்கப்படும்'' என்றும் அவர் கூறினார்.மன்ஹாட்டன் நகரின் மேடிசன் பூங்கா சதுக்கத்தில் சனிக்கிழமை இரவு
நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 30க்கும் மேற்பட்ட
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுமார் 20,000 அமெரிக்க வாழ்
இந்தியர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரதமராகப் பதவியேற்ற நாளில் இருந்து தொடர்ச்சியாகப் பதினைந்து நிமிடங்களுக்குக் கூட ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.
எல்லா குடும்பங்களுக்கும் வீடு: எனது அரசு, 100 சதவீத மக்கள் நல அரசாக செயல்படும். எனது அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும், சொந்தமாக ஒரு வீடு இருக்கும் நிலைமையை உருவாக்குவதே எனது கனவாகும். 21ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளையெல்லாம் முன்னெடுத்துச் செல்லும் நாடாக நம் தேசத்தை உருவாக்குவோம். விசா சலுகைகள்: வெளிநாடு வாழ் இந்தியர்களை எந்தக் காரணத்துக்காகவும் கைவிட மாட்டேன். தற்போது நடைமுறையில் உள்ள இந்தியா வம்சாவளியினர் அடையாள அட்டை (பி.ஓ.எஸ்.) திட்டத்துடன், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ஓ.சி.ஐ) திட்டம் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம், பி.ஓ.எஸ். அடையாள அட்டைதாரர்கள் இந்தியா வருவதற்கான வாழ்நாள் விசா, இனி வழங்கப்படும்.
அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு நீண்ட நாள் விசா வழங்கப்படும். இந்த விசாவில் தங்கியிருப்போர் இனி தங்களைப் பற்றிய விவரங்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்தியா வந்தடையும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக விசா வழங்குவதுடன் நீண்ட நாள் சுற்றுலா விசா வசதியும் அளிக்கப்படும். என்.ஆர்.ஐ.களுக்கு அழைப்பு: கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கெடுக்க முன் வரவேண்டும் என்றார் மோடி.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.