ரத்த
உறைவை தடுக்கவும், ரத்த ஓட்டத்தை சீரமைக்கவும் உதவும் ஆஸ்பிரின்
மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம், என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள ரோவெட் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி
ஆசிம் தத்தா ராய் இது குறித்து குறிப்பிடுகையில்,"வயதானவர்கள் தங்கள்
உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கொள்ள, தினமும் சிறிதளவு ஆஸ்பிரின்
மருந்தை உட்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக
இந்த மருந்தை உட்கொள்வதால், வயிற்றில் புண் ஏற்பட்டு விடுகிறது. இதனால்,
சிலருக்கு வயிற்றில் ரத்தக் கசிவும் காணப்படுகிறது. நாம் தினமும்
பயன்படுத்தும் தக்காளியின் விதையில் உள்ள நிறம் மற்றும் வாசனையற்ற
பிசுபிசுப்பான பொருள், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தம் உறைவதையும்
தடுக்கிறது. எனவே, ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம்'
என்றார்.
இந்த
கண்டு பிடிப்பை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில், தக்காளியின் இந்த பகுதியை
தனியாக எடுத்து, பசை வடிவில் தயாரித்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தக்காளியின் இந்த பசை பகுதி சில பானங்களில் பயன்படுத்தப்பட்டு
வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.