சென்ற ஆண்டு மாமல்லபுரம் சித்திரை விழாவிற்கு சென்ற பாமகவினருக்கும் இன்னொரு தலித் சமூகத்தினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது, மரக்காணத்தில் மாநாட்டிற்கு சென்ற இரண்டு பாமகவினர் வெட்டிக்கொல்லப்பட்டனர், இதையடுத்து போராட்டம் நடத்திய டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், இதையடுத்து வடமாவட்டங்களில் பாமக வினர் நடத்திய போராட்டங்களில் பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதை கடுமையாக கண்டித்து சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பொது சொத்தை நாசம் விளைவித்தமைக்காக பாமக தலைமை 100 கோடி ரூபாய் அபாரதம் கட்ட வேண்டும் என்றும் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் வருமான இழப்பீடாக 20 கோடி வழங்கவேண்டும் என்று பேரவையில் பேசினார், மேலும் இதற்காக தனி அதிகாரிகள் நியமித்தார்.
27ம் தேதி செல்வி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார், அதையடுத்து தமிழகத்தில் அதிமுகவினர் நடத்திய வன்முறையில் பல பேருந்துகள் எரிக்கப்பட்டன, மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன, இது குறித்து இன்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய கருத்துகளாவன:
1) அ.தி.மு.க.வினரின் வன்முறையால் அரசு மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டிருப்பதால் குறைந்தது ரூ.210 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டையும் துல்லியமாக கணக்கிட்டு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளையும், வணிகம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டையும் கணக்கிட்டு, அதற்குக் காரணமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் மீது வழக்குத் தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.
3) பேரூந்து எரிப்பு, உடைப்பு, கடைகள் சூறை உள்ளிட்ட வன்முறை களில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
4) கடந்த ஆண்டில் ஜெயலலிதாவே கூறியவாறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்ட அ.தி.மு.க.வை தடை செய்யவும் அரசு தயங்கக்கூடாது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.