எதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம், காலாவதியாகும் காலம் என்று
உண்டல்லவா? அதுபோலத்தான் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு கலனின்
ஆயுட்காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கும். அது மேலிருக்கும்
மூன்று வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள்
இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் கொள்கலனின் ஆயுட்காலம்,
காலவதியாகும் தேதி போட்டிருக்கும்.
அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C… இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள். மேற்கண்ட படத்தில் B.21 என்று போட்டிருக்கிறது. இதில் B என்பது இரண்டாம் காலாண்டையும், 21 என்பது இரண்டாயிரத்து இருப்பத்தொன்றாவது வருடத்தையும் குறிக்கிறது.
ஜனவரி, பிப்ரவரி,மார்ச் முதல் காலாண்டு A, ஏப்ரல்,மே,ஜூன் இரண்டாம் காலாண்டு B, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மூன்றாம் காலாண்டு C அக்டோபர், நவம்பர், டிசம்பர் நான்காம் காலாண்டு D, உதராணமாக B-12 என்று போட்டிருந்தால், இரண்டாம் காலாண்டு ஜூன் முடிய 2012
என்று பொருள்படும். அதுபோலவே தங்களுடைய சமையல் எரிவாயு கலனில் இருப்பதையும்
ஒரு முறை பார்வையிட்டு சரியானதுதானா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை முந்தைய வருடங்களாக இருந்தாலோ முந்தைய மாதங்களாக
குறிக்கப்பட்டிருந்தாலோ அந்த சமையல் எரிவாயு கொள்கலனை திருப்பி தந்துவிட்டு
நடப்பு தேதியிட்ட, நடப்பாண்டிலிருக்கும் கொள்கலனைப் பெற்றுக்கொள்ளுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.