ஜெயலலிதாவின் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தினைப் பேசுவதைவிட, வட இந்திய ஊடகங்கள், தமிழகத்தில் ஒருவித காட்டு மனநிலை நிலவுவதான பிம்பத்தினையே ஏற்படுத்த முனைகின்றன. கட்டற்று போகும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு பற்றிய செய்தியை வாசிக்கும் பொழுதும் கூட உள்ளூர வெளிப்படும் தமிழர் விரோத கருத்தினை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. காலை 10 மணியில் இருந்தே இதற்கான செய்தி விதைகளை விதைத்துக்கொண்டிருந்தன. வட இந்திய ஊடகங்களை பார்க்கும் பொழுது ஒரு புனிதப்பட்ட தினமலரை பார்க்க முடிகிறது.
ஒரு வழக்கின் பின்னனியைப் பேசுகிறோம் என்று சம்பவங்களைப் பட்டியல் இடுவதைத் தாண்டி இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தினைப் பற்றி இவர்கள் பேச மறுக்கிறார்கள். 18 வருடங்களாக நிகழும் ஒரு வழக்கின் பின்னனியை போகிர போக்கில் பேசிச் சென்றதையே பார்க்கக் முடிகிறது. இது ‘ஜெ’வைத் தவிர பிறருக்கு நடந்திருக்கும் பட்சத்தில் இந்த ஊடகங்கள் இப்படியாக நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது.
எந்த
சமயத்திலும் ஜேவின் கேரக்டர் அசாசினேசன் இந்த் ஊடக கவனிப்பில் நடக்கவில்லை.
மாறாக தமிழகத்தின் கேரக்டர் அசாசினேசன் நடப்பதை பார்க்க முடிகிறது..
ஜேவைத் தவிர வேறொருவருக்கு நடந்திருக்கும் பட்சத்தில் மாபெரும்
குற்றவாளியாக்கி, ’கோடுங்கோலனாக;, சனநாயக மறூப்பாளனாக’ காட்டி
இருப்பார்கள்.
இன்னொரு புறம் இதே ‘நீதிமன்ற’ நேர்மை காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நடக்கும் அற்புதம் காணக்கிடைக்குமா?. ஊழலை விட கொலைக்குற்றம் பெரும் குற்றமல்ல என்கிறார்களோ?.. அதுசரி சங்கராச்சாரிக்கு , சனாதிபதி வெங்கட்ராமன் உண்ணாவிரதம் இருந்த வரலாறு உண்டு.. முன்னாள் தேர்தல் கமிசனர் (கான்சிடிடூசனல் அத்தாரிட்டி) போராடிய சம்பங்களும் உண்டு...
சு.சாமி வழக்கு பதியாமல் ஏதோ ஒரு நம்மைப்போல சுப்பனும், குப்பனும் வழக்கு பதிந்திருந்தால் இது போன்ற விசாரணை என்கிற சாத்தியங்களை எதிர்பார்த்திருக்க முடியுமா?
பார்ப்பனர்களுக்கும் பார்ப்பன கட்டுப்பாடுகளுக்கும் பார்ப்பன தரகர்களுக்கும் பார்ப்பன நலம் விரும்பிகளுக்கும் பார்ப்பன அதிகார மையங்களுக்கும் இடையே நிகழும் விவாதத்தில் (விவாதம் மட்டும்தான், சண்டையில்லை)எவனாவது அப்பாவி செத்து தொலைத்துவிடப்போகிறானோ என்பதே கவலையே
இந்த தீர்ப்பின் அரசியலும், இதற்கு அடுத்து நிகழ இருக்கும் நகர்வுகளின் அரசியலும் கவனத்திற்குரியவை.
இந்த தீர்ப்பிற்கு பின் உருவாகும் வெற்றிடத்தினை தேசிய கட்சிகளைக்கொண்டு நிரப்ப ஊடகங்களின் மூலம் நடக்கும் கருத்து கட்டமைப்புகள், பாஜகவின் செயல்பாடுகள் கவலைக்குரியவை.
திமுக-அதிமுக மட்டுமே மையப்படுத்தி நிகழும் தமிழக அரசியல் இதிலிருந்து வெளியேறி இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் பிடியில் செல்லுமா அல்லது பிராந்திய அரசியலை முன்னெடுக்குமா என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.
எப்படியாகினும் நமக்கான பிரச்சனைகள் குவிந்து கொண்டே தான் இருக்கின்றன.
ஜெவோ, கருணாநிதியோ தமிழர்களுக்கான அரசியல் தலைவர்களும் இல்லை. இவர்களால் நமக்கான குறைந்தபட்ச கோரிக்கைகள் நிறைவேறப்போவதும் இல்லை.
இந்த தீர்ப்பில் பயனடைந்த ஒரே நபர் , ’சு.சாமி’. நேர்மையான நபர், ஊழலுக்கு எதிராக போராடுபவர், அஞ்சாதவர், அதிகாரமிக்கவர் என்கிற கருத்து வலுப்பெறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
-திருமுருகன் காந்தி via facebook

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.