சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல். இப்போது இந்த மொபைல் நிறுவனம் இந்திய மார்கெட்டை குறிவைத்து அவர்களின் மொபைலை இந்தியாவில் களமிறக்கி உள்ளார்கள். . இதன் பெயர் சியோமி எம்.ஐ. 3 ஆகும். இதனை இணையத்தில் மட்டும் தான் வாங்க முடியும் , அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் வாங்க முடியும். இந்த மொபைலின் விலை ரூபாய்.13,999 ஆகும். இது பல கட்டங்களாக விற்பனைக்கு வந்தது. . ஆனால் விற்பனை தொடங்கிய சில நொடிகளீல் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன. அனைவரும் ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையத்தை அணுகியதால் அந்த தளம் சிறிது நேரத்திற்கு பயன்பாடு இல்லாமல் இருந்தது.
இதற்கு முன்பு மோட்டோ ஈ மொபைல் விற்பனைக்கு வந்த போது இது போல் நடந்தது. இன்று வரை அந்த மொபைலுக்காக இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மொபைலை வாங்கியவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை எல்லா கம்பெனிகளின் மொபைல்களை பயன்படுத்தியோரும் இது தான் சிறந்தது என்கிறார்கள். அடுத்து இந்த நிறுவனம் எம்.ஐ.4 என அடுத்த மொபைலை வெளியிட உள்ளது. சியோமியின் இந்திய வருகையால் மற்ற மொபைல் கம்பெனிகள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறது. தற்போது ஸ்டாக் இல்லாமல் உள்ள சியோமி எம்.ஐ.3 மொபைல் தீபாவளிக்கு விற்பனைக்கு வர உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.