மோடி அக்டோபர் 1 வரை அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் . எனவே அவசர அரசு வேலைகள் எல்லாம் மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் பார்த்துக் கொள்வார் என்று அறிவித்துள்ளார் . இந்த அறிவிப்பை அமைச்சரவை செயலாளர் அஜித் செத் மற்ற அமைச்சர்களிடம் தெரிவித்தார் .
அந்த அறிவிப்பின் தலைப்பில் , " மோடி அமெரிக்கா செல்லும் போது அவர் இல்லாத நேரத்தில் , அவசர வேலைகளை செய்வதற்கான ஏற்பாடு " என்று போடப்பட்டு இருந்தது . " இந்த அறிவிப்பு மத்திய அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ் , அருண் ஜெட்லி , நிதின் கட்காரி ஆகியோருக்கு அனுப்பப்பட்டது .
மோடிக்கு அடுத்து அரசில் இரண்டாவது இடம் யாருக்கு என்ற கேள்விக்கான பதில் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது . ராஜ் நாத் சிங் தான் மோடி பதவியேற்றபின் இரண்டாவதாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.