தமிழ் எழுத்துக்கள் உருவாக்கியவர் யார் என்பது வரலாறுகளில் இல்லை
தொல்காப்பியர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அதனால்தான் கல் தோன்றா மண்
தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ் என்று அருளாளர்கள் பாடி
உள்ளார்கள்.வள்ளலார் வந்து தமிழ் இறைவனால் தோற்றுவிக்கப் பட்டது.ஆதலால்
தமிழ் தந்தை மொழி என்றார்.உலகத்தில் முதன் முதலாக தோன்றிய மொழி தமிழ் மொழி
என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.உயிர் உடல் எப்பொழுது
உருவாக்கப் பட்டதோ அப்பொழுதே தமிழ் தோன்றியதாகும்.அதனால்தான் ,உயிர்
எழுத்து,மெய் எழுத்து,உயிர் மெய் எழுத்து ,அடுத்து ஆயுத எழுத்து என்று
சொல்லப்படுகின்றது.அந்த ஆயுத எழுத்தில் அனைத்தும் அடங்கி உள்ளன,அதனால்தான்
அதற்கு வரி வடிவம் இல்லாமல் புள்ளி வடிவம் வைத்தது ஆகும் .அந்த புள்ளிதான்
உடம்பு ,உயிர் ,கடவுள் என்பதாகும் ,இதை புரிந்து கொண்டால் கடவுள் நிலை
அறிந்து அம்மயமாகலாம் என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க
கொள்கைகளாகும்,நாம் எங்கு இருந்து வந்தோம் என்ற விலாசம் தெரியாமல் அலைந்து
கொண்டு உள்ளோம் .
உலகில் தோன்றிய ஞானிகள் யாரும் சரியான விலாசம் தரவில்லை
கண்களை மூடிக் கொண்டு உளறி விட்டு சென்று விட்டார்கள்,உலக மக்களுக்கு
உண்மையை தெரிவிக்க இறைவனால் அனுப்பட்டவர் வள்ளலார் அவர்கள்.அவர் தான்
வாழ்ந்து சென்ற உண்மையான வழியையும் உண்மையான விலாசத்தையும் தெளிவாக,திரு
அருட்பாவில் எழுதி வைத்து உள்ளார்கள்,அதிலும் நிறைய பேர்களுக்கு குழப்பம்
,அந்த குழப்பம் தீர வேண்டுமானால் எந்த பற்றும் இல்லாமல்,பொது நோக்கம்
வேண்டும்,அதை வள்ளலார்
பொது உணர்வு உணரும் போது அல்லால் பிரித்தே
அது வெனில்தோன்றா அருட்பெரும்ஜோதி!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.