23 வயதான பெண் ஒருவர் ஓடும் வண்டியில் அவரது ஆண் நண்பர் மற்றும் இரண்டு வேறு நபர்களால் கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டு , தெற்கு டில்லியின் ரோட்டோரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார் .
இந்த கொடூர சம்பவம் மீண்டும் டில்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஒரு டில்லி பெண் போலிஸ் கான்ஸ்டபிளின் மகள் .
போலிஸ் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் , " அந்த பெண் ஆண் நண்பர்களுடன் வண்டியில் சென்று கொண்டு இருந்தார் . அப்போது அவருக்கு மருந்து கலந்த குடி பானங்கள் கொடுக்கப்பட்டது . அதனை குடித்த அவர் மயக்கம் அடைந்துள்ளார் . பின் அவர் ரோட்டில் தூக்கு வீசப்பட்டுள்ளார் . ஒரு பெண் மயக்க நிலையில் ரோட்டில் இருப்பதை பார்த்து ஆட்டோ டிரைவர் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் " என்றார் .
போலிசார் இதுவரை இருவரை கைது செய்துள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.