இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற உள்ளது . முந்தி ஒரு முறை தெங்கொரியாவின் சியோலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது , இன்சியான் என்னும் நகரம் ஒரு பெயர் தெரியாத நகரம் . ஆனால் இன்று உலகில் முக்கியமான துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும் . மேலும் அதிக பயணிகளைக் காணும் துறைமுகங்களில் இதுவும் ஒன்று . இப்போது கேலாகலமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயராகிக் கொண்டு இருக்கிறது .
இந்த வார வெள்ளிக்கிழமை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நடைபெற இருக்கிறது . ஆனால் தொடக்க விழா நடைபெறும் மைதானத்தில் வெறும் 40 சதவீத டிக்கெட்கள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம் . அங்கே இருந்த பயணி ஒருவர் கூறுகையில் , " விளையாட்டுப் போட்டிகள் சியோலில் நடைபெற்று இருந்தால் கூட்டம் அதிகமாக இருந்து இருக்கும் " என்றார் .
மக்களுக்கு பிடித்த விளையாட்டுகள் ஆன ரக்பி , கால்பந்து , ஜிம்னாஸ்டிக்ஸ் , நீச்சல் ஆகிய போட்டிகளுக்கு டிக்கெட்கள் விற்று தீர்ந்தது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.