இந்தியாவை உலக அளவில் ஒரு சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற இந்திய பிரதமர் மோடி வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி சர்வதேச மற்றும் ஊள்ளூர் தலைமை நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் தன்னுடைய " மேக் இன் இந்தியா " பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார் .
விக்யான் பவானில் நடக்க உள்ள இந்த பிரச்சாரத்தில் 100க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது .
பிரதமர் மோடி தன்னுடைய முதல் சுதந்திர தின விழா உரையின் போது அனைத்து உலக வர்த்தக சமூகத்தினரையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய அழைப்பு விடுத்து இருந்தார் . அவர்களுக்கு " வாருங்கள் , இந்தியாவில் உருவாக்குவோம் " என அழைப்பு விடுத்தார் .
இந்தியாவைப் போன்று நேர வலையம் இருக்கும் மற்ற நாடுகளிலும் இந்த பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.