மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மீனா, அங்காளஈஸ்வரி மீது மோட்டார் சைக்கிளில் வந்த ‘மர்ம’ நபர் மாணவிகள் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மீனா, அங்காளஈஸ்வரி ஆகியோருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவிகள் மீது ஆசிட் வீசிய ‘மர்ம’ நபரை பிடிக்க போலிஸ் விசாரணை நடத்தி வந்தனர், ஆனால் இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்நிலையில் திருமங்கலம் விடத்தக்குளம் ரோட்டில் வசித்து வரும் சுதாகர் தனது மகன் சங்கரநாராயணன் (24) என்பவரை நேற்று மாலை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்த சுதாகர், தனது மகன்தான் மாணவிகள் மீது ஆசிட் வீசினான் என்றும் அவன் மனநலன் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதை செய்துள்ளான் என்றும் கூறினார்.
போலிஸ் விசாரணையில் அந்த மனநலன் பாதிக்கப்பட்டவர் கூறியதாவது
கடந்த வாரம் 12–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் குளித்து விட்டு வெளியே கிளம்பி திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்குள்ள பழைய இரும்பு கடையில் ஒரு ரூபாய் கொடுத்து காலி மதுபாட்டில் வாங்கினேன்.
பின்னர் அருகில் உள்ள உறவினரின் கடைக்கு சென்று சித்தப்பா ஆசிட் கேட்டதாக கூறி அந்த கடையில் ஆசிட் வாங்கினேன். தினமும் நான் ஆசிட் வாங்குவதால் கடைக்காரர் எனக்கு ஆசிட்டை கொடுத்தார். காலி பாட்டிலில் ஆசிட் வாங்கி விட்டு பஸ் நிலையம் பின்பக்க வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது உள்ளுணர்வு தூண்டியதால் அந்த சமயம் அந்த வழியாக வந்த கல்லூரி மாணவிகள் மீது திடீரென்று என் கையில் இருந்த ஆசிட்டை ஊற்றினேன். அவர்கள் வலியால் அலறி துடித்து கீழே விழுந்தனர். இதையடுத்து ஒரு ஆட்டோவில் ஏறி ஓடினேன், அப்போது மிச்சம் இருந்த ஆசிட் என் கையில் பட்டதால் காயம் ஏற்பட்டது, ஆசிட் ஊற்றியதால் போலீசார் என்னை தீவிரமாக தேடிவந்தது தெரிந்தது. கையில் ஆசிட் பட்டதால் எனது காயமும் நாளுக்கு நாள் அதிகமானது. இதனால் நேற்று இரவு வீட்டுக்கு சென்றேன்.
அப்போது கையில் ஏற்பட்ட காயம் குறித்து சந்தேகம் அடைந்த எனது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், நான்தான் ஆசிட்டை ஊற்றியதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் என்னை போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்த முயன்றதாகவும் சங்கரநாராயணனை ஏற்கனவே போலீசார் கைது செய்தது தெரியவந்துள்ளது.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.