பாஜகவின் இன்னொரு தலைவரும் இப்போது தன்னுடைய பேச்சால் சர்ச்சையில் சிக்கி உள்ளார் . இந்த முறை மாட்டிக் கொண்டது , நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த ஹேம மாலினி .
இவர் இந்த முறை மக்களவை தேர்தலில் மதுராவில் நின்று வெற்றி பெற்றார் . இவர் தனது தொகுறியை பார்வையிட நேற்று சென்றார் . அப்போது விரிந்தவன் என்னும் பகுதிக்குச் சென்றார் .
அங்கே அவர் பேட்டி அளிக்கும் போது , " விரிந்தவனில் 40,000 விதவைகள் உள்ளனர் . நிறைய விதவைகள் பெங்காலில் இருந்து வருகின்றனர் . இது சரியல்ல . அவர்களால் ஏன் பெங்காலில் இருக்க முடியவில்லை . பெங்காலிலும் நல்ல கோவில்கள் இருக்க தான் செய்கிறது . இது பீகாரில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும் " என்றார் .
மேலும் இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுடனும் பேச இருப்பதாகவும் தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.