சமீபத்தில் "வித் யூ, வித்தவுட் யூ" என்ற சிங்கள மொழிப்படம் பிவிஆர் திரை அரங்கில் வெளிவருவதாக இருந்தது, அந்த படத்தை தமிழ் அமைப்புகள் மிரட்டி நிறுத்தியதாக சிலர் பரபரப்பு கிளப்பினர், உண்மையில் படம் தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்த ஒரு சிங்கள குரலாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்லியுள்ளனர், இந்நிலையில் எந்த தமிழ் அமைப்பும் இந்த படத்துக்கு மிரட்டல் விடாத நிலையில் லீனா மணிமேகலை உட்பட பலர் தமிழ்தேசிய அமைப்புகளை எதிர்த்து பேசினர்.
இந்நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு பதிவிட்டிருந்தார், அதில் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் என்று குறிப்பிட்டிருந்தார், இதை அடுத்து லீனா மணி மேகலை தன்னை கார்ட்டூனிஸ்ட் பாலா "ஏக மொழியில் விபசாரி, வியாபாரி என்றும்" குறிப்பிட்டதாக கூறி அந்த பதிவை பாலா நீக்கவேண்டுமென குமுதம் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார் ,
குமுதம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வரதராஜன் அவர்கள் அழைத்துப் பேசினார். கார்டூனிஸ்ட் பாலா தன் மோசமான பதிவுகளை எடுத்துவிடுவதாக உறுதியளித்து நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்! என்று மீண்டும் ஒரு பதிவை லீனா வெளியிட்டார்,
பாலா டாக்குமெண்ட் வியாபாரி லீனா மேடம் என்று குறிப்பிட்டதை லீனா திரித்து தன்னை விபசாரி என்று கூறியதாக குமுதம் நிறுவனத்திடம் முறையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கார்ட்டூனிஸ்ட் பாலா தனிப்பட்ட முறையில் தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் எழுதியதில் எப்படி அவர் வேலை செய்யும் நிர்வாகம் தலையிட்டு பதிவை தூக்க சொல்லலாம் என்று பலர் குமுதத்தின் நடவடிக்கையையும் விமர்சித்துள்ளார்கள்.
பாலா எழுதிய பதிவு, லீனாவின் பதிவுகள் ஸ்கீரின் ஷாட்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இது குறித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.