சென்னையில் 13 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி
காலையில் டில்லியில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து பலியாகினர் அந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சென்னையை அடுத்த போரூரில் உள்ள மெளலிவாக்கத்தில் 13 மாடி கட்டிடம் இன்று மாலை சுமார் 5 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை, கீழ்தளங்களில் வேலை முடிவடைந்ததால் பலரும் சமீபத்தில் தான் இதில் குடியேறினார்கள்
இதுவரை இருவர் பலியாகியதாகவும் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது, இன்னும் 30 பேருக்கும் மேல் இடிபாடுகளில் சிக்கியிருப்பார்கள் என தெரியவந்துள்ளது, இவர்களை மீட்கும் பணி மும்மரமாக நடைபெறுகிறது.
இக்கட்டிடத்தில் அடித்தளம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஒரு நாள் மழைக்கே தாங்காமல் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இதை மறுத்துள்ள கட்டுமான நிறுவனம் இடி தாக்கியதால் நடந்த விபத்து என்று கூறியுள்ளது.
ரமணா படத்தில் ஏரி இருந்த இடத்தில் பலமற்ற மண் இருக்கும் இடத்தில் கட்டிடங்கள் கட்டி அது இடிந்து விழுவது போன்ற காட்சியமைப்பு இங்கே உண்மையாகியுள்ளது, இப்படத்தில் வருவதை போல இந்த கட்டிடம் போரூர் ஏரி இருந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மண் இக்கட்டிடத்தை தாங்கும் அளவு பலமின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தை கட்டி வரும் பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் முத்து ஆகியோர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏரியில் 13 மாடி கட்டிடம், எங்கே அரசாங்க விதிமுறைகள்? இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் எழுதுங்கள்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.