இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் ஆஷஸ் போட்டிகளை போன்று அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இதில் தோனியால் முறியடிக்க வேண்டிய 2 சாதனைகள் உள்ளன. அவை என்னென்ன சாதனைகள் என்று பார்ப்போம்,
* இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்னும் சாதனை . இந்த சாதனை இப்போது முன்னால் கேப்டன் சுனில் கவாஸ்கர் வசம் உள்ளது. அவர் 14 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து உள்ளார் .இதற்கு அடுத்து அஜித் வடேகர் 11 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து உள்ளார். இபபோது உள்ள தோனி 10 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து உள்ளார். இந்த தொடரில் 5 போட்டிகள் உள்ளதால் 15 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் என்னும் சாதனையை படைக்க உள்ளார்.
* இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்து அதிக வீரர்களை வீழ்த்தி உள்ளவர் என்னும் சாதனை இப்போது இங்கிலாந்து அணியின் ஆலன் நாட் வசம் உள்ளது. இவர் 16 போட்டிகளில் விளையாடி 54 பேரை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி 16 போட்டிகளில் விளையாடி 50 பேரை வீழ்த்தி உள்ளார். இந்த தொடரில் மேலும் 5 பேரை வீழ்த்தி விட்டால் தோனி புதிய சாதனை நிகழ்த்த உள்ளார்.
தோனி இந்த 2 சாதனைகளோடு நிறுத்தி கொள்ளாமல் இந்திய அணியை தொடரை வெல்ல வைத்து சாதனை படைக்க வேண்டும். இந்த சாதனை தான் அனைவராலும் பாராட்டப்படும்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.