பிரேசிலின் நட்சத்திர வீரரான நெய்மர் கொலம்பியா அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் காயம் ஏற்பட்டது , இதனால் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடவில்லை . இவரது இழப்பினால் பிரேசில் அணி ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது .
இவருக்கு காலிறுதிப் போட்டியில் கொலம்பியா அணி வீரர் ஜுவான் முழங்கால் மூலம் முதுகில் தாக்கியதால் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது . இதனை ஆயுர்வேத முறைகளால் சரி படுத்த முடியும் என்றும் , அதனால் அவர் கேரளா வருகிறார் என்றும் தகவல்கள் வருகின்றது .
.
இது தொடர்பாக பிரேசில் மருத்துவர்கள் கேரள முதலைமைச்சர் ஒம்மன் சாண்டியுடன் பேசியதாக கூறப்படுகிறது . ஆனால் இதை முற்றிலுமாக மறுத்தார் சாண்டி . மேலும் அவர் நெய்மருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்களாம் என ஆராயும்படி மருத்துவர்களை கேட்டுக் கொண்டுள்ளார் . கேரள கால்பந்து ரசிகர்கள் விரும்புவதால் நெய்மருக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என பிரேசிலிடம் கூற உள்ளதாக தெரிகிறது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.