1) தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அருண் ஜெட்லி இதை 5 இலட்சமாக உயர்த்த கோரியிருந்தார், ஆனால் அவரே நிதி அமைச்சராக தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் 2.5 இலட்சமாக மட்டுமே உயர்த்தியுள்ளார்.
#அது போன வருசம், இது இந்த வருசம்
2) கங்கை நதியை சுத்தப்படுத்தி மேம்படுத்த ரூ.2037 கோடி நிதி ஒதுக்கீடு, இந்த திட்டத்திற்கு நமாமி கங்கா என பெயரிடப்பட்டுள்ளது
#ரொம்ப முக்கியம்
3) சிகரெட், புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி 22% அதிகரிக்கப்படுகிறது.
#பட்ஜெட் படிக்கும் போதே ரூ.85 விலையிருந்த கிங்க்ஸ் பாக்கெட்டை ரூ.100 ஆக்கி விற்க ஆரம்பித்துவிட்டார்கள், சிகரெட் குடிப்பவர்கள் குறைந்தால் சரி
4)25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். முதல் மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும்.
#கம்பெனி முதலாளிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்னு சொல்லுங்க
5) வீட்டுக் கடனுக்கான வட்டியில் வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு
#வாடகையை குறைப்பாங்களா?
6) தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களீல் ரூ.500 கோடி செலவில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்
#கரண்ட்டு கட்டு அப்போவாவது குறையுமா?
7) ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.
# சிலை வைக்குறோம்னு சேகரித்த இரும்பை என்ன செய்யப்போகின்றீர்கள்?
8) கூல்டிரிங்க்ஸ், எவர்சில்வர் பொருட்களின் வரி உயருகிறது.
#பெப்சி, கோக் விலை எகிறுமே
9) வைரம்,நவரத்தின கற்கள் மற்றும் டிவிக்களின் விலை குறைய உள்ளது.
#பணக்காரங்களுக்கு மேலும் வசதி
10) சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்பட உள்ளது.
#நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்க
11) ஃபிரிட்ஜ், செல்போன், கம்யூட்டர்,லேப்டாப்,கேட்ஜட் , தீப்பெட்டிகளின் வரி குறைக்கப்பட உள்ளது.
#அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் இலவசமாகவே தரப்போறாங்க
புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும் விலைவாசி குறைய ஏதுவான திட்டங்கள் இல்லையென பலராலும் விமர்சிக்கப்படுகிறது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.