இன்று இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த இரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா , இதற்கு முந்தைய அரசு அறிவித்த 99 திட்டங்களில் இதுவரை ஒரே ஒரு திட்டம் தான் முடிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் .
அவர் கூறுகையில் , கடந்த 10 ஆண்டுகளாக 60,000 கோடி செலவில் 99 திட்டங்களை இதற்கு முந்தைய அரசு அறிவித்தது . ஆனால் அந்த திட்டங்களில் இதுவரை ஒரே ஒரு திட்டம் தான் முடிக்கப்பட்டுள்ளது . மேலும் கடந்த 30 வருடங்களாக 676 திட்டங்கள் 1,57,883 கோடி செலவில் திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் அந்த திட்டங்களில் இதுவரை 317 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன . மற்றவை கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது . அவர்கள் திட்டங்கள் அறீவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி இருந்தனர் . திட்டத்தை நடத்தி முடிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினார் .
அந்த திட்டங்கள் முடிக்கப்படவில்லை என்றால் , அந்த திட்ட்ங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது . கூட்டத் தொடரின் போது , திட்ட்ங்களை அறிவித்து விட்டு , பின்னர் நாம் யாரும் கண்டு கொள்ளாததால் அப்படியே திட்டங்களை கிடப்பில் போட்டு விடுகின்றனர் . இனிமேல் நாம் ஏமாற கூடாது . இந்த பட்ஜெட்டின் அனைத்து திட்டங்கள் நிறைவேறும் வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்போம் .
இப்போது தெரிகிறதா நமது டிக்கெட் கட்டணங்களின் விலை ஏறுகிறது என்று ??
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.