திருவள்ளுர் மாவட்டம் உப்பரபாளயத்தில் கடந்த 6 ஆம் தேதி அன்று கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். இதில் நாகராஜ் என்கிற 19 வயது வாலிபர் மட்டும் உயிர் பிழைத்தார். இவர் தான் உயிர் பிழைத்த சோக கதையை சொன்றார். இவரது தந்தை கொத்தனாராக வேலை செய்பவர், இவர் சித்தாளாக வேலை செய்கிறார். விபத்து நடந்த அன்று இவர்கள் தூங்கி கொண்டு இருந்தார்கள் . சுவர் இடிந்து விழுவதை பார்த்த தந்தை அவரது மகனை காப்பாற்ற அவனை கட்டிபிடித்து கொண்டார். சுவர் தந்தையின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் நாகராஜ் மயங்கி விட்டார். காலை வந்த மீட்பு குழுவினர் , நாகராஜின் குரலை கேட்டு அவரை மீட்டனர். ஆனால் தந்தை இறந்து விட்டார்.
நாகராஜ் மருத்துவமனையில் சேர்க்கபட்டார், ஆனால் அவரது உடலில் சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை. அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டார்.
அந்த பாசமிகு தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.